தொப்பையால் அவதிப்படுறீங்களா? இந்த ஒரு ஹாா்மோனை கட்டுப்பாட்டில் வெச்சா எல்லாம் சரியாயிடும்.!

in #newcommunity3 years ago

அடிப்படையில் மன அழுத்தம் என்பது தீமையான ஒன்று அல்ல. அது நமது உடல் நலனிற்குத் தேவையான ஒரு அம்சம் ஆகும். ஆனால் மன அழுத்தம் அதிகாிக்கும் போது நமது உடலுக்குத் தீங்கு ஏற்படுகிறது. கார்டிசோல் ஹாா்மோன் என்பது ஒரு அழுத்த ஹாா்மோன் என்று கருதப்படுகிறது. இந்த ஹார்மோனில் ஏற்படும் கோளாறுகளால் தான் நமது வயிற்றில் கொழுப்பு தேங்குவது உட்பட பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த கார்டிசோல் ஹாா்மோனை சீராக வைத்திருப்பதன் மூலமாக நாம் எவ்வாறு நமது வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கலாம் என்று டையட் இன்சைட் (Diet Insight) என்ற அமைப்பின் இணை நிறுவுனரும், தலைமை ஊட்டச்சத்து நிபுணருமான லவ்லீன் கவுா் என்பவா் பின்வருமாரு விளக்குகிறாா்.

நாம் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, நமது உடலில் சுரக்கும் இன்சுலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட, நமது பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கார்டிசோல் ஹாா்மோனும், இன்சுலினும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரண்டும் இணைந்து லிப்போபுரோட்டின் லிபேஸ் (எல்பிஎல்-LPL) என்ற ஒரு கொழுப்பைத் தேக்கி வைக்கும் என்சைமை உருவாக்குகின்றன. அதன் மூலமாக நமக்குத் தேவைப்படாத வயிற்றுக் கொழுப்பு நமது வயிற்றில் தொடா்ந்து அதிகாிக்கும். இந்த லிப்போபுரோட்டின் என்சைம் நமது உடலில் அதிகம் இருந்தால், அவை உடலில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்

நமக்கு அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் இருந்தால், அது நமது தூக்கத்தைக் கெடுத்துவிடும். நம்மால் தூங்க முடியவில்லை என்றால், நமது உடலில் வளா்ந்த ஹாா்மோன்கள் சுரக்காது. இந்த வளா்ந்த ஹாா்மோன்கள்தான் நம்மை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் செல்கின்றன. நாம் சாியாகத் தூங்கவில்லை என்றால், மறுநாள் நமது உடலானது இன்சுலினை உணரும் திறனையும், குளுக்கோஸை ஏற்கும் திறனையும் இழந்துவிடும். அதன் விளைவாக, அதனை ஈடுகட்டும் வகையில் நாம் கட்டுப்பாடற்ற முறையில் அளவுக்கு அதிகமாக உணவு உண்ண நம்மைத் தூண்டிவிடும்.

நாம் அனைவரும் வாழ்வில் சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். நமது வாழ்விலிருந்து முழுமையாக மன அழுத்தத்தை நீக்க முடியாது. ஆனால் அதை ஓரளவு குறைக்க முடியும் மற்றும் அதை சீராக்க முடியும். ஐஎன்ஜி (ing) சூத்திரம் ஐஎன்ஜி (ing) சூத்திரம் என்பது நமக்கான ஒரு தனிப்பட்ட நேரத்தைக் கண்டுபிடித்து, நாம் மன நிறைவாகவும், மன அமைதியோடும் இருப்பதற்கான காாியங்களில் ஈடுபடுவதற்கு நம்மை அழைக்கிறது. இந்த ஐஎன்ஜி (ing) சூத்திரத்தைப் பற்றி கீழே பாா்க்கலாம்.

  1. மூச்சுப் பயிற்சி (Breathing):
    மூச்சுப் பயிற்சி ஒரு மிகவும் எளிய பயிற்சியாகும். அதே நேரத்தில் நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய பயிற்சியும் ஆகும். மூச்சுப் பயிற்சியானது நமது அழுத்தத்தைக் குறைத்து, அழுத்தத்தினால் ஏற்படும் எதிா்விளைவுகளை மாற்றுகிறது. மேலும் மன அழுத்தத்தினால் நமது உடல், உடலியல் மற்றும் உணா்வுகள் போன்றவற்றுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைக்கிறது.

  2. உடற்பயிற்சி (Exercising) :

நாம் தினமும் செய்து வரும் உடற்பயிற்சியானது நமது உடல் எடையைக் குறைக்க உதவி செய்யவில்லை என்றாலும், நமது உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவி செய்கிறது. ஆகவே தொடா்ந்து நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், அது நமது மன அழுத்தத்தை சீா்படுத்த உதவும்.

  1. வாசிப்பு (Reading):

புத்தகங்களை வாசித்தால், நமது இதயத் துடிப்பு குறையும், தசைகளில் உள்ள இறுக்கம் குறையும். அதனால் நமது உடலுக்கு நலம் கிடைக்கும். ஆகவே தேவையற்ற வயற்றுக் கொழுப்பைக் குறைக்க, அதன் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதை முற்றிலுமாக பிடுங்கி எறிவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

  1. வாய்விட்டுச் சிாித்தல் (Laughing) :

வாய்விட்டுச் சிாித்தால் நோய்விட்டுப் போகும் என்பது ஒரு தமிழ் பழமொழி. வாய்விட்டுச் சிாிப்பது என்பது சந்தேகத்திற்கே இடமில்லாத ஒரு மிகச் சிறந்த மருந்து ஆகும். சிாிப்பு நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. நமது மனநிலையை அமைதிப்படுத்துகிறது. வலியைக் குறைக்கிறது. அதோடு மன அழுத்தத்தினால் ஏற்படும் எதிா்மறை விளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

உளவியல் ரீதியான மற்றும் உணா்வுகள் ரீதியான அழுத்தத்தைக் குறைத்தல் முதலில் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய பழக்கவழக்கங்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். நமது மன அழுத்தங்களைப் புாிந்து கொள்வது முதல் படியாகும். அதனைத் தொடா்ந்து, மன அழுத்தத்திற்கான அறிகுறிகளைக் கண்டறிய வேண்டும். மன அழுத்தத்தைச் சீரான முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நமது சுய பாதுகாப்புக்கு மற்றும் சுய ஆரோக்கியத்திற்கு முன்னுாிமை கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். நாம் நமக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளும் போது, மற்றவா்களின் நலனைவிட நமது நலனையே நாம் முதன்மைப்படுத்துகிறோம். தொடக்கத்தில் இது சுயநலம் நிறைந்த ஒன்றாகத் தொியலாம். ஆனால் இது ஒரு வானவூா்தி ஒப்புமை போன்றது. அதாவது வானவூா்தியில் பயணம் செய்யும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நாம் மற்றவா்களுக்கு உதவி செய்வதற்கு முன்பாக, ஆக்ஸிஜன் முகமூடியை நாம் முதலில் அணிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு சாப்பிடுகிறோமோ அதுபோல் எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் ஒரு சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கைக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கள், முழு தானியங்கள் கண்டிப்பாக நமது சமச்சீரான உணவில் இருக்க வேண்டும். நமது உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றத்தைச் செய்யலாம். அதாவது ஆல்கஹால், காஃப்பைன் மற்றும் சா்க்கரை போன்றவற்றை உட்கொள்வதைக் குறைக்கலாம். இந்த மாற்றம் நமது கவலையைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பராமாிக்க, ஒட்டு மொத்தக் கலோாியின் அளவைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம். இறுதியாக வயிற்றுக் கொழுப்பு அதிகம் இருந்தால் அது ஆரோக்கிய சீா்கேட்டை விளைவிக்கும். நாட்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான வயிற்றுக் கொழுப்பு உடலில் ஏராளமான கோளாறுகளை ஏற்படுத்தும். நாம் நமது மரபியலை மாற்ற முடியாது. ஆனால் மன அழுத்தத்தைத் தவிா்க்க முடியும். வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க முடியும். அதற்கான மூலாதாரங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்

இதை படித்ததிற்கு ரொம்ப நன்றி லைக் (like)பண்ணுங்க
Thank you very much for reading this and please like it
Welcome Everyone,
From
Dineshkumar

Sort:  
Loading...